ஊர் -திருப்புளியங்குடி
மாவட்டம் -தூத்துக்குடி
மாநிலம் -தமிழ்நாடு
மூலவர் -பூமிபாலகர்
தாயார் -மலர்மகள் நாச்சியார் ,நிலமகள் நாச்சியார் ,புளியங்குடி வள்ளி
தீர்த்தம் -வருணத் தீர்த்தம், நிருதி தீர்த்தம்
திருவிழா -வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம் -காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மதியம் 1மணி முதல் மாலை 6 மணி வரை.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம் .
தல வரலாறு:
இத்தலத்தில் பெருமாள் நாபியிலிருந்து தாமரை கொடி தனியாக கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பெருமாளின் பாத தரிசனம் செய்ய வெளிப்பிரகாரத்தில் உள்ள ஜன்னல் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் .பிரம்மஹத்தி தோஷம் பெற்ற இந்திரனுக்கு தோஷம் நீங்கப்பெற்ற தலம். வருணன் நிருதி தர்மராஜன் நரர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த தலம்.
நவ திருப்பதிகளில் இது நாலாவது திருப்பதி .திருப்புளியங்குடி நவகிரகங்களில் இது புதன் தலம் . புதனால் ஏற்படும் தோஷங்கள் விலக இத்தலத்தில் வந்து வேண்டினால் தோஷம் நிவர்த்தி ஆகும். இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக அருள் பாலிக்கிறார். மரக்காலை தலையின் அடியில் வைத்து சயனத்தில் உள்ளார் .இத்தலத்தில் புதன் கிரகத்துக்கு என்று தனி சன்னதி கிடையாது. பெருமாளே புதன் கிரகமாக அருள்பாலிக்கிறார். எனவே புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலக பெருமாளை வணங்கி தோஷ நிவர்த்தி பெறுகின்றனர்.