திருத்தணி முருகன் கோவில் வரலாறு

திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாக திகழ்கிறது. வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமான் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் தருகிறார். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

இங்குள்ள முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன.

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், அருணகிரிநாதர் ஆகியோர் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திருத்தணி அமைந்துள்ளது.

திருத்தணிகை முருகன் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்தது முருக பக்தரான அருணகிரிநாதர் 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தளத்தில் பெரிதும் போற்றி பாடியுள்ளார்.

வருடத்தின் 365 நாட்களை குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்துள்ளது இக்கோவில். ஒரு லட்சம் ருத்திராட்சங்கள் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது.

ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடித் தெப்பத் திருவிழா போன்ற திருவிழாக்கள் இங்கு நடைபெறும்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்

முகவரி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,
திருத்தணிகை- 631209
திருவள்ளூர் மாவட்டம்.

Ph: +91-44 2788 5303

Recent Post