தொப்பை என்பது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாதது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உணவு பழக்கவழக்கம் என பல காரணங்கள் உண்டு.
தொப்பை மிக எளிதாக வந்து விடும் ஆனால், தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டும். தொப்பை பிரச்சனையினால் அவதிப் பட்டு வரும் நிலையில் அதை எளிதாக நீக்குவது எப்படி என இந்த பதிவில் பாப்போம்.
இஞ்சி
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறோடு, தேன் கலந்து சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்து வந்தால், தொப்பை வேகமாக கரைந்து விடும்.
எலுமிச்சை
தொப்பையில் உள்ள கொழுப்பை நீக்க எலுமிச்சை உங்களுக்கு பெரிதும் பயன்படும். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலின் நச்சுத்தன்மையையும் நீக்கும். காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் நீங்கும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தொப்பை கொழுப்பை குறைக்க விரும்புவோர் கிரீன் டீ குடித்து வரலாம். இவை வயிற்று கொழுப்பை குறைக்க நிச்சயம் உதவும். மேலும் இது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.