இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க சில வழிகள்

உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்கை முறை மாற்றங்கள் காரணமாக உடல் எடை அதிகமாகிறது. இதனால் சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது. சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் தொப்பை உருவாகிறது.

தொப்பையை குறைப்பது கடினமான வேலை அல்ல. நாம் சிறிதளவு முயற்சி எடுத்தால் போதும். தொப்பையை குறைத்து விடலாம். தொப்பையை குறைக்க சில எளிய வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.

தொப்பையை குறைக்க வேண்டும் என்ற முடிவு எடுத்த பிறகு உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறும்.

டீ காபியில் சேர்க்கப்படும் வெள்ளை சர்க்கரையும் தொப்பை ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே சர்க்கரையின் அளவை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம்.

தயிரில் கலோரி குறைவாக உள்ளதால் தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே தொப்பையை குறைக்க வேண்டுமென்றால் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேற்றி தொப்பையை குறைக்கும்.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. எனவே வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைத்து தொப்பை வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்.

சுரைக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு. சுரைக்காய் ஜூஸ் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் தொப்பை வேகமாக குறைவதை காணலாம்.

நாம் சாப்பிடும் உணவு நன்றாக செரிமானம் ஆகிவிட்டால் தொப்பை வராது. செரிமானம் நன்கு செயல்பட நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இது மட்டும் போதாது. கிடைக்கும் நேரங்களில் நடைப்பயிற்சி, யோகா செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

தொப்பை வராமல் இருக்க தவிர்க்க வேண்டியவை

உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறையுங்கள்.

‘சிப்ஸ்’, ‘ஊறுகாய்’ வகைகளை அதிகம் சாப்பிட வேண்டாம்.

உடலில் இயற்கையாக இருக்கும் தண்ணீர் தன்மையைக் குறைக்கும் விதத்திலான மருந்துகளை உபயோகிக்கக்கூடாது.

எப்போதும் அரை வயிறு அளவுக்கு சாப்பிட்டால் போதும். மூச்சு விட சிரமப்படும் அளவுக்கு சாப்பிட்டால் தொப்பை அதிக தொல்லை தந்திடும்.

உருளைக்கிழங்கு, கடலை, பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதை பெருமளவு குறையுங்கள். அல்லது சாப்பிடாமல் விட்டுவிடுங்கள்.

மருத்துவரின் அறிவுரைப்படி தேவையான நடைப் பயிற்சி. உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

Recent Post