தொண்டை வலி குணமாக மருத்துவம்

சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு மென்று உமிழ்ந்து தப்பிவிடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டை புண் குணமாகும்.

தேங்காய் பால், மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50-100 மில்லி குடித்து வரலாம்.

தேங்காய் பாலில் மாசிக்காய் & வசம்புத்துண்டை உரைத்து சாப்பிட தொண்டைப் புண் குணமாகும்.

இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையின் மேல் பூசி வரவும்,

இரண்டு எலுமிச்சம் பழச் சாறுடன் தண்ணீர் கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்கவும்.

அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை இவற்றை பொடி செய்து பாலில் கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பணங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வலி குறையும்.

முல்லைப்பூ இலையை நெய்யில் வதக்கி ஒத்தடம் இட தொண்டை வலி குறையும்.

மாதுளம் பூவை எடுத்து சாறு பிழிந்து அதைக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டை புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

முருங்கை வேர் பட்டை அல்லது எலுமிச்சைப் பழச்சாற்றை வெந்நீரில் உப்பு போட்டு கலக்கி தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் கரகரப்பு குணமாகும்.

வசம்பு துண்டு ஒன்றை வாயில் அடக்கி கொள்ள தொண்டை கட்டு குணமாகும்.

நீரைக் கொதிக்க வைத்து வேப்பம் பூவைப் போட்டு ஆவியை வாய் வழியாக உள்ளிழுக்க, இந்த ஆவியினால் வரட்டு இருமல், தொண்டைப்புண், தொண்டை வலி குணமாகும்.

வெந்நீரில் உப்பு போட்டு கலக்கி சிறிது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தால் மேற்கூறிய நோய்கள் நீங்கும்.

தொண்டை புண் நீங்க பாட்டி வைத்தியம்

அன்னாசி பழச் சாற்றை வாயில் ஊற்றி  தொண்டையில் வைத்திருந்து மெதுவாக குடிக்க வேண்டும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, பச்சையாக சாப்பிட்டால் சிறு கசப்பு சுவையோடு வழவழப்பாக இருக்கும். இதனால் தொண்டை புண், வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

வெந்நீரில் நிறைய உப்பு போட்டு தொண்டையில் படும்படி வைத்திருந்து கொப்பளிக்க தொண்டை வலி, தொண்டை கமறல் குணமாகும்.

அதிமதுரப் பாலும், கற்கண்டும், புழுங்கல் அரிசியையும் வாயில் போட்டு அடக்கி கொண்டு அதன் சாற்றை விழுங்க நல்ல குணம் தெரியும்.

Recent Post

RELATED POST