தும்பை பூ மருத்துவ பயன்கள்

தும்பை ஒரு செடியினத்தைச் சேர்ந்தது. நன்றாகச் செழிப்பாக வளர்ந்த செடி ஒரு அடி உயரம் இருக்கும். தும்பை மழைக்காலத்தில் எங்கும் செழித்து வளரும் தும்பைப் பூ மல்லிகைப் பூவைவிட வெண்மையாக இருக்கும். மழைக்காலம் முடியும் தருவாயில் செழித்து வளர்ந்து பூத்திருக்கும்.

மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகள் தும்பைக்குத் தனி இடம் உண்டு. தும்பைப் பூவிற்கு ‘பாதமலர்’ என்ற பெயரும் உண்டு.

செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். 

தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது.

விஷக்கடிக்கு

எந்த விதமான விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அதன் விஷத்தை முறித்து விடும்.

தும்பைப்பூ மற்றும் தும்பை இலைகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்து, அம்மியில் வைத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றில் கால் அவுன்ஸ் வடிகட்டி குடிக்க வேண்டும். அதே பூவையும், இலையையும் அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் முறிந்துவிடும்.

தலைநோய் – தும்பைப்பூ தைலம்

தும்பைப்பூவை சுமார் 50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெயில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்தத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.

மூக்கடைப்பு – மூக்கில் சதை நீங்க

உலர்ந்த தும்பைப் பூ 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா 10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெயில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.

தலைவலி, தலை பாரம் குணமாக சிறிதளவு தும்பைப் பூவைச் சேகரித்து, அதனை பசும்பால் விட்டு அரைத்து ஒரு துணியில் தடவி, அதை நெற்றிப் பொட்டின் மீது வைத்தால் தலைவலி குணமாகும். நெற்றியிலும் துணியைப் போட்டு வைத்து தலைபாரம் இறங்கும்.

பாம்பு கடிக்கு

பாம்பு கடித்து விடும் தலைக்கு ஏறி மயக்கம் விழுந்து விட்டாலும், தும்பை இலைச் சாற்றை எடுத்து மூக்கில் விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளியும்.

தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சம அளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து, அதில் ஒரு அவுன்ஸ் சாற்றை உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி உண்டாகும். பேதி ஆகும் அச்சப்படத் தேவையில்லை.

சிறிது நேரத்தில் உடலில் சூடு உண்டாகும். உடலில் சூடு ஏறிவிட்டாலே விஷம் முறிந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம். சிறிது நேரத்தில் மயக்கம் தெளித்து கண்களைத் திறந்து விடுவார்கள்.

இச்சமயத்தில் பசி எடுக்கும். பச்சைப் பருப்பையும் பச்சரிசியையும் சமஅளவு சேர்த்து அதை சமைத்து சாப்பிடக் கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் வரை உப்பு, காரம், புளிப்பு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் சேர்க்க கூடாது.

பீனிசம் குணமாக

பீனிசம் ஏற்பட்டு மூக்கில் இரத்தம் வந்து கொண்டே இருந்தால், தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சம அளவு எடுத்துக் கசக்கிச் சாறு எடுத்து இரண்டு துளி வீதம் காலை மற்றும் மாலையில் மூக்கில் விட்டு வந்தால் பீனிசம் குணமாகும்.

சொறி, சிரங்கு குணமாக

தேவையான அளவு தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சேகரித்து அரைத்து சிரங்கு மேலும் உடலில் அரிப்பு இருந்தால் உடல் முழுவதும் தடவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு சுட்ட சீயக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து அதைத் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

இருமல் – சளி தொல்லை நீங்க

சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

கடுமையான நீர் கோர்வை நீங்க

சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து, ஒரு தமிழா தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் கடுமையான நீர்க்கோவை நீங்கும்.

தொண்டை கட்டு நீங்க

சிறிதளவு தும்பைப் பூ தேன், மிளகுத்தூள் சேர்த்து இருநாட்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்.

தும்பைப்பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து சிறிது சிறிதாக வாயில் போட்டு வைத்திருந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும்.

25 தும்பை பூக்களை,காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுத்தால் அவர்களின் தொண்டை பிரச்சனை நீங்கும்.

கபம் கரைய – ஆஸ்துமா கட்டுப்பட

ஒரு கைப்பிடி அளவு தும்பைப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 10 மிளகு, 100 கிராம் தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் எடுத்து அனைத்தையும் சிறிதளவு நெய் விட்டு வதக்கி அரைத்து தினமும் ஒருவேளை துவையலாகச் சாப்பிட்டு வந்தால் மார்பிலுள்ள சுபம் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயும் கட்டுப்படும்.

Recent Post

RELATED POST