புலிகள் பற்றிய சில தகவல்கள்

உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இந்தியா மற்றும் வங்கதேசத்தின் தேசிய விலங்காக புலி கருதப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை 97 சதவீதம் அழிந்து விட்டது. அழிந்து வரும் புலிகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 19ம் நூற்றாண்டில் ஒரே ஒரு புலி நேபால் மற்றும் இந்திய மக்கள் 450 பேரை கொன்று குவித்தது.

புலிக்கு இரவு நேரத்தில் மனிதர்களை விட ஆறு மடங்கு கண் பார்வை கூர்மையாக இருக்கும். எனவே புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடுவதை விரும்பும்.

பெண் புலிகளை விட ஆண் புலிகள் அளவில் பெரியது. சிங்கம் பசித்தால் மட்டும் வேட்டையாடும். ஆனால் புலி எப்போதுமே விலங்குகளை வேட்டையாடும்.

புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கரியை உணவாக உட்கொள்ளும். கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது. புலியின் நெற்றியில் உள்ள கோடுகள் சீன மொழியில் அரசன் என்பதை குறிக்கும்.

புலிகள் செடி கொடி அடர்ந்த காடுகள் மரங்கள் அடர்ந்த காடுகள் சதுப்பு நிலக் காடுகள் புல்வெளிகள் என புலிகள் வாழும் அனைத்துவித பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மை கொண்டது. புலிகள் பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது.

புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கூறுவது உண்மையா?

பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகள் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் பசி காரணமாக தான் ஈன்ற குட்டிகளையே சாப்பிடும். ஆனால் புலி எவ்வளவுதான் பசித்தாலும் தான் ஈன்ற குட்டியை திங்காது. “புலி பசித்தாலும் பிள்ளையைத் திங்காது” என்ற சொல் மருவி புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று மாறியுள்ளது.

Recent Post

RELATED POST