முடி செழித்து வளர இதை செய்தாலே போதும்

சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சை அகற்றும்.

காய்கறிகள், பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 2 முறை குளியல் அவசியம். வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து தலையிலும் உடம்பிலும் அரைமணி நேரம் ஊறிய பிறகு கடலை மாவு, வெந்தய பொடி தேய்த்து குளிக்க வேண்டும்.

முகத்திற்கு சந்தனம், தேன், வெள்ளரிக்காய், கேரட், மஞ்சள் ஆகிய இயற்க்கை பொருள்களினால் தயாரிக்கப்பட்ட பேஸ்பேக் உபயோகிக்கலாம்.

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அருந்தவும். தலைமுடியை இயற்கையாகவே காயவைத்தல் மிகவும் நல்லது.

முடியின் வளர்ச்சி, வளர்ச்சி குறைபாடு, சரியான உணவு, மற்றும் உடல் ஆரோக்கியம், வயது, சீதோஷ்ண நிலை, உபயோகிக்கும் தண்ணீர், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், பரம்பரை இவையெல்லாம் தான் காரணங்கள்.

நல்ல உணவு என்றால் அதில் புரதம் அவசியம். புரதம் அதிகமாக உள்ள உணவு வகைகள் பால், முட்டை, இறைச்சி, மீன், சீஸ் ஆகியவை. ரொட்டி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், அரிசி, கோதுமை, தேன் , பழவகைகளில் மாவு சத்து மற்றும் சர்க்கரை சத்து உள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட உணவுகளை தினமும் சமச்சீராக சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக வளரும். வயதாக, வயதாக முடியின் வளர்ச்சியும் தாமதமாகும். அதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

கோடை காலத்தில் சூரியனின் புற ஊதாக்கதிர்களினால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால், குளிர் காலத்தில் முடி அதிகமாக உதிர்வதோடு வளர்ச்சியும் குறைகிறது.

நல்ல தண்ணீரில் முடியை அலசுவது மிகவும் அவசியம். போர்வெல் தண்ணீரில் உள்ள அதிகப்படியான உப்பு முடியின் வேர்க்கால்களை பாதிக்கும்.

நாம் பயன்படுத்தக்கூடிய சீப்பு, பிரஷ் ஆகியவை தரமானதாக அழுத்தமாக இருப்பது அவசியம். அழுத்தமாக ரப்பர் பேண்ட் போட்டு கட்டுவது, எப்பவுமே ஹேர் பேண்ட் போடுவது ஆகிய பழக்கங்களினால் முடி உதிர்வது அதிகரிக்கும்.

அதிகப்படியான வியர்வை, மன அழுத்தம், பயம், வேலைப்பளு ஆகியவை முடி உதிராக காரணமாகும். இவைகளை தவிர்ப்பது நல்லது.

தரமான எண்ணெய், ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகிப்பது நல்லது, அதேபோல பரம்பரை வழியாக நம் பெற்றோருக்கு நம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு முடி எவ்வாறு உள்ளதோ அதே போலத்தான் நமக்கும் முடி அமைய வாய்ப்புள்ளது. ஆனாலும் முடியின் வளர்ச்சியை புரிந்து நாம் செயல்பட்டால், பரம்பரையாக குறைவான முடி உள்ளவர்களும் நாம் அடர்த்தியான முடியைப் பெறலாம்.

Recent Post

RELATED POST