ஊர் – திருவல்லவாழ்
மாவட்டம் – பந்தனம்திட்டா
மாநிலம் – கேரளா
மூலவர் – திருவாழ்மார்பன்
தாயார் – செல்வத் திருக்கொழுந்து நாச்சியார்
தீர்த்தம் – கண்ட கர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
திருவிழா – மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு ,திருவிழா முடிந்து மறுநாள் அர்ச்சனையை தவிர வேறு எந்த பூஜையும் நடைபெறாது.
திறக்கும் நேரம் – அதிகாலை 4 மணி முதல் பகல் 11: 30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
தல வரலாறு ;
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 70 வது திவ்ய தேசம் ஆகும். கேரளாவில் உள்ள சங்கரமங்கலம் என்ற கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை ஏகாதசி தினத்தில் விரதம் ஏற்று மறுநாள் துவாதசி அன்று இந்த கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒருசமயம் இவர் வரும் வழியில் உள்ள காட்டில் வசித்த ஒரு அசுரன் இந்த அம்மையாரை செல்லவிடாமல் மறைந்திருந்து அவர் அறியாமல் அம்மையாரை துன்புறுத்தினான். எனவே அம்மையார் பெருமாளிடம் முறையிட்டார். அப்போது காட்டு வழியே ஒரு பிரம்மச்சாரி இளைஞன் ஒரு அசுர சக்தியுடன் சண்டையிடுவதை கண்டார்.
சற்று நேரத்தில் எந்த ஒரு சத்தமுமின்றி அமைதியாக இருந்தது. அந்த பிரம்மச்சாரி இளைஞனையும் காணவில்லை. எதுவும் புரியாத நிலையில் அம்மையார் கோயில் வந்தடைந்தார் அப்போது காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளநரை போன்ற தோற்றத்தில் இருந்தார் பெருமாள் தன்னை பாதுகாக்க பெருமாளே நேரில் வந்தது உணர்ந்துகொண்டார்.
பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை இறைவனும் இத்தலத்தில் அங்கவஸ்திரம் என்று மார்பு தெரியும்படி காட்சி அளிக்கிறார். அவரது மார்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால் இவருக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் ஏற்பட்டது.
அனைத்து பெருமாள் தளங்களிலும் திருவடி தரிசனம் சிறப்பு, ஆனால் இங்கு மாருதி தரிசனம் சிறப்பானதாக உள்ளது. பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கும் எனவே ஐயப்பன் கோவிலை போலவே இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை.
மார்கழி திருவாதிரை சித்திரை விஷூ அன்று இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால் இரு நாட்களில் மட்டும் பெண்களுக்கு அனுமதி உண்டு. இங்கு உப்பு மாங்காய் நெய்வேத்தியம் ஆக படைக்கப்படுகிறது இத்தளத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் போதிலும் தரப்படுகிறது மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம் அதனால் விபூதி கொடுப்பது வழக்கமாயிற்று.