திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரலாறு

Tiruchengode Arthanareeswarar Temple History in Tamil : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது இந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை போன்ற மற்ற பெயர்களும் உள்ளன.

சிவன் தனது உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து, அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருளக்கூடிய கோயில்தான் இந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.

அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் இக்கோவிலில் உள்ளது.

கோவிலுக்கு செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன.

கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

கோயில் திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

Recent Post