ஊர் -திருவாறன்விளை
மாவட்டம் -பந்தனம்திட்டா
மாநிலம் -கேரளா
மூலவர் -திருக்குறளப்பன்
தாயார் -பத்மாசனி
தீர்த்தம்– வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி
திருவிழா -தை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆராட்டு திருவிழா
திறக்கும் நேரம் -அதிகாலை 4:30 மணி முதல் பகல் 12: 30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
தல வரலாறு;
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 74 வது திவ்ய தேசம். பாரதப் போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்தது. அதைத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர் புரிய நினைத்தான் கர்ணன்.
அந்த நேரத்தில் அர்ஜுனன், கர்ணன் மீது அம்பு எய்தியதால் இறந்துபோனான். போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால் துயரத்தில் ஆழ்ந்தான், எனவே தன் மன நிம்மதிக்காகவும், போரில் மற்ற உயிர்களை கொன்ற பாவம் தீரவும் அர்ஜுனன், இத்தலத்தில் தவம் புரிந்ததாகவும் இவனது தவத்திற்கு மகிழுந்து பெருமாள் பார்த்த சாரதியாக இவனுக்கு காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
ஒருமுறை பிரம்மனிடமிருந்து வேதங்களை இரு அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். அந்த வேதங்களை மீட்டு தரும்படி பிரம்மன் பெருமாளை வேண்டினார். பெருமாளும் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மா இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவம் இருந்ததாக கூறுவர்.
இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தில் அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக புராணங்கள் கூறப்படுகிறது. குருவாயூர் போல இங்கும் துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. தங்களது கோரிக்கை நிறைவேற இங்கு வன்னிமரக்காய்களை துலாபாரம் ஆக கொடுக்கிறார்கள்.
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதி, கோயிலின் வடக்கு வாசல் வழியாக செல்கிறது. பரசுராமருக்கு என்று இங்கு தனி சன்னதி உண்டு. அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலைக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு வழிபாடு நடக்கிறது.