இன்றைய ராசி பலன் (சனிக்கிழமை) – 22-08-2020

மேஷம்

இன்றைய தினம் சுறுசுறுப்பாக செல்லும். உறுதியான மனநிலையோடு காணப்படுவீர்கள். உங்களுடைய பணிகளுக்கு பாராட்டு கிடைக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்

Advertisement

உங்களுடைய வளர்ச்சிகளில் சில தடைகள் ஏற்படலாம். அதனை சமாளித்து நீங்கள் வெற்றி பெற வேண்டும். பணி நிமித்தமாக பயணம் காணப்படும். குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். பண வரவு மற்றும் செலவு சேர்ந்தே காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மிதுனம்

உங்களுடைய பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். பணியிடத்தில் அமைதியான சூழல் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சளி பிரச்சனை உருவாகலாம்.

கடகம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக இன்று அமையும். பணியிடத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

சிம்மம்

இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.

கன்னி

உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணியின்போது சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சக ஊழியர்களிடம் பிரச்சினை ஏற்படலாம். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்

உங்களுடைய வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இவைகளை நீங்கள் சமாளிக்க வேண்டும். பணியின்போது சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

விருச்சிகம்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்திடம் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் மன தைரியம் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு

நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்

உங்களுடைய வளர்ச்சியில் சிறு தடைகள் காணப்படும். இன்று நீங்கள் சற்று பதட்டத்தோடு காணப்படுவீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

இன்று நீங்கள் சற்று குழப்பத்தோடு காணப்படுவீர்கள். உங்கள் பணியில் தவறுகள் ஏற்படும். உங்கள் பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

மீனம்

இன்று நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணி சம்பந்தமாக புதிய சந்திப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். ஊக்கத் தொகை கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.