இன்றைய ராசி பலன் – 17-08-2020

மேஷம்

நன்கொடைகள் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை தரும். புதிய தொடர்புகள் நிதி ரீதியாக நல்ல பலனை தரும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

ரிஷபம்

Advertisement

இன்றைய தினம் உங்களுடைய நம்பிக்கை மற்றும் ஆசைகள் நிறைவேறும் நாளாக அமையும். நாள் முழுவதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். புதிய திட்டங்கள் நல்ல பலனை கொடுக்கும். பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

மிதுனம்

மன உளைச்சல் நீங்கி தெளிவோடு இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கடகம்

உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெறமுடியும். பிறரிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். தர்மசங்கடமான சூழலை சந்திப்பீர்கள். சக ஊழியர்களால் அதிருப்தி ஏற்படும். பணிகளில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம்.

சிம்மம்

நீங்கள் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். பிறரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் புதிய முதலீடு நல்ல பலனை தரும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். பொறுமையாக இருப்பது நல்லது.

கன்னி

இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

துலாம்

கோபத்தை கட்டுப்படுத்தி பயனுள்ள விஷயங்களை யோசித்து செயல்பட வேண்டும். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். ஏற்கனவே திட்டமிட்ட நல்ல பணிகள் உடனே நிறைவேறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கி புதிய பலன்கள் உண்டாகும்.

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். உங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். பணவரவு குறைவாக காணப்படும். சக ஊழியர்களிடம் அளவாக பழகுவது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். கடினமான பணிகளை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்

உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். இதனால் உயர்அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரத்தில் நல்ல வரவு கிடைக்கும்.

மீனம்

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள், புதிய தொடர்புகள் கிடைக்கும். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். பணியிடத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நபர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.