திருச்சி உத்தமர் கோவில் வரலாறு

ஊர்உத்தமர்கோவில்
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மாநிலம்தமிழ்நாடு
மூலவர்புருஷோத்தமன்
தாயார்பூர்ணவல்லி அம்பாள், சௌந்தர்யா பார்வதி
தலவிருட்சம்கதலி-வாழை மரம்
தீர்த்தம்கதம்ப தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த் திருவிழா
திறக்கும் நேரம்காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கோயில் வரலாறு

சிவனை போலவே ஐந்து தலை கொண்ட பிரம்மாவை கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என்று எண்ணி பணிவிடை செய்தார். இதை கண்ட சிவன் குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரமஹத்தி தோஷம் உண்டாயிற்று.

பிரம்மாவின் கபாளம் அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. சிவனுக்கு படைக்கப் பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு அருந்தினாலும் கபாளம் நிறையவே இல்லை.

பசியில் வாடிய சிவன்,கபாளத்தை பிச்சை பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிச்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து எண்ணற்ற ஸ்தலங்களுக்கு சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த பொது பெருமாள் சிவனின் பாத்திரத்தில் பிச்சை இடவே அது முழுவதுமாக நிரம்பி சிவனின் பசி நீங்கியது .இதனால் தாயார் பூரணவல்லி என்ற பெயரும் பெற்றார். மஹாவிஷ்ணு பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி கொடுத்தார்.

மும்மூர்த்திகள் ஸ்தலம்

பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்தில் உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்றபடி உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருள்கிறார். அருகில் மகாலட்சுமி சன்னதி உள்ளது. இவ்விரண்டு தாயாரின் தரிசனம் சிறப்பு பலன்களைத் தரக்கூடியது .விஷ்னுவுக்கு நேர் பின்புறம் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார் . இவர் பிச்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் உள்ளார்.

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்முர்த்திகளும் தனி தனி சன்னதியில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர் .ஒரே ஸ்தலத்தில் மூம்மூர்த்திகளையும் தரிசிப்பது அபூர்வம். கார்த்திகை தீபதிருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பானை கொளுத்த பட்டு மும்மூர்த்திகள் ஒன்றாக உலா வருகின்றனர்.

தைப்பூசத்தன்று சிவனுக்கும்,மாசிமகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடைபெறுகிறது. இங்கு சப்தகுரு அருள் பாலிக்கின்றார். குரு பெயர்ச்சியின் போது விசேஷ அபிஷேகங்கள் நடை பெறுகிறது. எனவே இத்தலம் சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கபடுகிறது.

பிரம்மா சன்னதி

படைக்கும் தொழிலான பிரம்மாவிற்கு பூலோகத்தில் நமக்கென தனி கோவில் இல்லை என்பது மனகுறை இருந்தது. ஆகவே மஹாவிஷ்ணு பூலோகத்தில் பிறக்கும் படி செய்தார் பிரம்மா. இத்தலத்தில் பெருமானை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக பெருமாள் கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார்.

இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து வணங்கினார். அவரது பக்தியில் மகிழிந்த பெருமாள் காட்சி தந்து நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் கோவில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனி வழிபாடு இருக்கும் என்றார். பிற்காலத்தில் இவருக்கு சன்னதி கட்டப்பட்டது. பிரம்மாவிற்கு இடப்புறத்தில் சரஸ்வதி தெற்கு நோக்கி படி இருக்கிறார். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி ஜெபமாலையுடன் காட்சி தருவது தனி சிறப்பு.

Recent Post