துளசி சக்தி வாய்ந்த ஒரு மூலிகைச் செடியாகும். இது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி சிறந்த மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி டீ அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
துளசி டீ எப்படி தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் 10 அல்லது 15 துளசி இலைகளை போடவும். சிறிதளவு இஞ்சியை தோல் நீக்கி தட்டி போடவும். அதனுடன் 2 ஏலக்காயை சேர்க்க வேண்டும்.
மிதமான சூட்டில் நன்றாக கொதித்த பிறகு அதனை வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்தத் துளசி டீ அருந்துவதால் மன அழுத்தத்தை குறைக்கும்.
வாயில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி துளசிக்கு உள்ளது. தொண்டைப் புண்ணால் அவதிப்படுபவர்கள் இந்தத் துளசி டீயை தயார் செய்து பருகலாம்.
துளசி டீ பயன்கள்
இந்தத் துளசி டீ மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும். சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் துளசி டீ நல்ல மருந்தாக பயன்படுகிறது.
துளசி டீ பருகுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தத் துளசி டீயை தினமும் குடிக்கக்கூடாது. வாரம் ஒரு முறை குடிக்க வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதனை அதிக அளவு குடிக்க கூடாது. ஏனென்றால் இது கர்ப்பப்பையை சுருங்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் இதனை அதிகம் குடித்தால் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். எனவே இதை வாரம் ஒரு முறை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.