மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்

வெயிலில் அலைந்தால் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும். சிலருக்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். மஞ்சளை தணலில் போட்டு அதன் புகையைத் முகர்ந்தால் நீர்கோவை குணமாகும். தலைவலியும் குணமாகும்.

அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி காய்ந்த பிறகு குளித்து வந்தால், வேர்க்குரு காணாமல் போய்விடும்.

மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவு எடுத்து அரைத்து, அந்த விழுதை தினமும் பூசி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.

ஒரு டம்ளர் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் உடனடியாக நீங்கும். மேலும் தொண்டை எரிச்சல். வயிற்று எரிச்சல் குணமாகும்.

தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்தால், தொண்டை புண் ஆறும். தொண்டை சளி நீங்கும்.

நெல்லிக்காய் பொடியுடன் சம அளவு மஞ்சள் கலந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

குழந்தைக்கு தரும் தாய்ப்பால் சுத்தமடைய தாய்மார்கள் உணவில் அளவான மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வது நல்லது.

மஞ்சள்தூளை இலுப்பை எண்ணெயுடன் சேர்த்து தடவினால் பித்த வெடிப்பு சரியாகும்.

மஞ்சள், கடுக்காய் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து, சேற்றுப் புண் உள்ள இடத்தில் பூசினால், சேற்றுப்புண் குணமாகும்.

Recent Post

RELATED POST