அடுத்து ஒரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகப்படுத்தும் Twitter…

Facebook-ற்கு பிறகு அதிகம் பயன்படுத்தபடுவது Twitter-ஐ தான். உலக அளவில் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை Twitter மூலமாக மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, இந்நிறுவனம் ‘voice tweets’ என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகபடுத்த உள்ளது. இந்த அறிவிப்பை Twitter-ன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அம்சம், iOS APP-ல் மட்டும் முதல் கட்டமாக அறிமுகப்படுத்த இருக்கிறது. 140 விநாடிகள் ஆடியோ பதிவை வெளியிடலாம். வரம்பு மிறினால், அது புது ஆடியோவாக உருவாக்கிக் கொள்ளும்.

‘voice tweets’ வெளியிடும் போது அதனை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என Youtube-ல் இருப்பது போல் எண்ணிக்கை காண்பிக்கும். ‘voice tweets’-க்கு reply ‘voice tweets’-ஆக கொடுக்க முடியாது.

இந்த புதிய அம்சம் சோதனையில் உள்ளது. இது, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முதலில் அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Android smartphones இந்த அம்சம் வருவது குறித்து எந்த தகவலும் இல்லை.

தற்போது, ஒரு டுவிட்டுக்கு 280 எழுத்துக்களை அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சம் பிரபலங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.