மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் வரலாறு

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் 3400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோவிலாகும்.
மலைக்கோட்டை திருச்சி மாநகரத்தின் அடையாளமாக திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும் அதனை சுற்றி கோட்டையும் அமைந்துள்ளதால் இதனை மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாறை உலகின் மிக பழமையான பாறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பாறையானது முதன்முதலில் பல்லவர்களால் வெட்டப்பட்டது. பிறகு மதுரை நாயக்கர்களால் விஜயநகர ஆட்சியின் கீழ் இக்கோயில் முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டது.

இக்கோவில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகள் ஏற வேண்டும்.

இக்கோவிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. அத்துடன் இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன.

இங்கு நவக்கிரகங்கள் அனைவரும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சகல பாவங்களை நீக்கும் இராமேஸ்வரம் கோவில் வரலாறு

மலைக்கோட்டை குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோர் வீற்றிருந்ததாக கூறப்படுகிறது.

மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்று தோற்றமளிக்கும். வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்று தோற்றமளிக்கும்.

Recent Post