அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்

ஊர் -திருக்கார்வானம்.

மாவட்டம் -காஞ்சிபுரம் .

மாநிலம்– தமிழ்நாடு.

Advertisement

மூலவர்– கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள்.

தாயார் -கமலவல்லி நாச்சியார் .

தீர்த்தம்– கவுரி தீர்த்தம் .

திருவிழா– வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம்– காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

Ulagalanda Perumal Temple Thiru Karvanam
Ulagalanda Perumal Temple Thiru Karvanam

தலவரலாறு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54 வது திவ்ய தேசம். கார்வானத்துள்ளாய் கள்வா’ என இத்தல பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார்.

உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு “நீரகத்தாய்,” “காரகத்தாய்” என திவ்ய தேசங்களை மட்டும் பாடியுள்ள திருமங்கையாழ்வார். இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது பெருமாளின் பெயரையும் சேர்த்து பாடிவிட்டார்.

திருமங்கை ஆழ்வார் இத்தலம் வந்தபோது இந்த மூன்று தளங்களும் “திருஊரகத்துடன்” வந்து விட்டதா? அல்லது எப்போது இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கு மூலவர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உலகளந்த பெருமாள் கருவறையில் மேற்கு நோக்கிய திருமுகத்துடன் இருக்கிறார்.

உலகளந்த பெருமாளுக்கு எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கிறார். திருவோணத்தை ஒட்டி இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காஞ்சிபுரம் சுற்றியுள்ள 22 திவ்யதேசங்களில் இத்தலம் கச்சி ஊரகம் எனப்படுகிறது. கச்சி என்றால் காஞ்சிபுரம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.