உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் ஆகியவை நீங்கும். இதில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ளது. உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.

அத்திப்பழம் எளிதில் ஜீரணமாகும். மேலும் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். மற்ற பழங்களில் உள்ள சத்துக்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு கிடைக்கிறது.

100 கிராம் அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள்

புரதச்சத்து1.3 கிராம்
கொழுப்புச்சத்து0.3 கிராம்
மாவுச்சத்து9.5 கிராம்
நார்ச்சத்து2 கிராம்
கலோரிகள்43

100 கிராம் உலர் அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள்

புரதச்சத்து3.3 கிராம்
கொழுப்புச்சத்து1.5 கிராம்
மாவுச்சத்து48.6 கிராம்
நார்ச்சத்து9.2 கிராம்
கலோரிகள்209

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது.

தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிலிருந்து 3% கால்சியம் நமக்கு கிடைக்கிறது. இதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.

ஒரு உலர் அத்தி பழத்தில் 46 கலோரிகள் இருக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படும்.

நமது உடலில் சோடியத்தின் அளவு அதிகமாகி பொட்டாசியத்தின் அளவு குறைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை தடுக்க உலர்ந்த அத்திப்பழம் உதவுகிறது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தி, ரத்த உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.

அத்திப் பழத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. மேலும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

உலர்ந்த அத்திப் பழத்தை பாலில் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அத்தி பழத்தை நன்றாக ஊறவைத்து பின் அதனுடன் முந்திரி மற்றும் பால் சேர்த்து பருகலாம். அத்திப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் செரிமான அமைப்பு நன்றாக செயல்படும்.

அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அத்திப்பழத்தில் உள்ள ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Recent Post