சாப்பிடுவதற்கு முன்னால், சானிடைசரை எடுத்துக் கொள்ளலாமா..? அப்படி எடுத்துக் கொண்டால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
சானிடைசர்:
ஒரு காலத்தில் யாராவது ஒருவர் மட்டுமே பயன்படுத்தி வந்த சானிடைசர், தற்போது அனைவரையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அதனால், அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..? எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்..? என்பது தொடர்பான எந்தவொரு அடிப்படை புரிதலும் இல்லாமல் சிலர், சானிடைசரை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
சானிடைசரின் இரண்டு முகங்கள்:
கொரோனா வைரசிடம் இருந்து தப்பிப்பதற்கு, நாம் சானிடைசர்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த சானிடைசர்கள் பொதுவாக ஆல்கஹால் கலந்து தான் தயரிக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில நிறுவனங்கள், டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருளை சானிடைசரில் பயன்படுத்துகின்றன. இது பொதுவாக பூச்சி மருந்துகளில் பயன்படுத்தும் ஒரு பொருள். இந்த வகை சானிடைசர்களை வாங்கும் போது, மக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன் சானிடைசர்:
கொரோனா அச்சத்தின் காரணமாக, ஒரு சிலர் ஆர்வ கோளாறுகளில், சாப்பிடுவதற்கு முன்னரும் கூட, சானிடைசர்களை பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படி செய்யவே கூடாது என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது மிகமிக ஆபத்தானது. இதன்காரணமாக, அந்த முகக்கவசத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு, சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கொரோனாவின் பயத்தின் காரணமாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தல் காரணமாகவும் தான் தற்போது அனைவரும் சானிடைசரை பயன்படுத்துகிறோம். ஆனால், அதனை எப்படி..? எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.