அதிசயங்களையும் பெருமைகளையும் கொண்ட உத்திரகோசமங்கை கோவில் வரலாறு

கோவில் பெயர் : அருள்மிகு உத்தரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோயில்
மூலவர்: மங்களநாதர் சுவாமி
தாயார்: மங்களேஸ்வரி அம்மன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது ஒரு பழமையான சிவத்தலம்.

பல அதிசயங்களையும் பல பெருமைகளையும் கொண்ட அமைதியான ஒரு கோவில். ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன.

இத்தளத்தை கைலாயத்திற்கு இணையாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அதனால் இத்தளத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

உத்திரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் உமையம்மை. சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேத மந்திரங்களை உபதேசித்து அருளினார். அதனால் இத்தளத்திற்கு உத்தரகோசமங்கை என்ற பெயர் உருவானது.

இக்கோவிலில் 6 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையைக் காணலாம். இந்த நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத பச்சை மரகத கல்லால் உருவாக்கப்பட்டது. மரகத நடராஜரின் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் இருக்கும். திருவாதிரை தினத்தன்று சந்தனம் அகற்றப்பட்டு மரகத மேனியுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்த நடராஜர் சிலையை மாதிரியாக வைத்து தான் தில்லை நடராஜர் கோவிலில் நடராஜர் சிலையை உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலுக்கு ஆன்மீக பக்தர்கள் அவ்வப்போது மிக சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இத்தலத்தில் பகவான் பல அற்புதங்களை நிகழ்த்தி அடியவர்களே ஆட்கொள்கிறார்.

திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மேளம் அடிப்பது கிடையாது.

இக்கோவிலில் உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடு செய்து வந்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பாலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன.

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி: அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை – 623 533, ராமநாதபுரம் மாவட்டம்.

Recent Post