உத்திதபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

இருகரங்களும் வலுப்பெற உத்திதபத்மாசனம் உதவுகிறது. பிராணாயாமம், தியானம் போன்ற மேற்படிகளுக்குச் செல்லவும் இந்த ஆசனம் உதவும்.

உத்திதபத்மாசனம் செய்முறை

தரைவிரிப்பில் அமர்ந்து வலது காலை இடது தொடை மீதும், இடது காலை வலது தொடை மீதும் வைக்க வேண்டும். இரு குதிங்கால்களும் அடிவயிற்றைத் தொடும்படி இருக்க வேண்டும்.

பின்னர் இருபக்கமும் இரு உள்ளங்கையை ஊன்றி சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு உடலை மேலே தூக்க வேண்டும். இரு உள்ளங்கைகள் மட்டும் தரை விரிப்பில் இருக்க வேண்டும். உடல் அந்தரத்தில் இருக்க வேண்டும். இந்நிலையே உத்திதபத்மாசனம் என்ப்படும்.

பின் சுவாசத்தை வெளிவிட்டவாறு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இம்மாதிரி இரண்டு மூன்று தடவை செய்யலாம்.

உத்திதபத்மாசனம் பலன்கள்

இரண்டு கைகளும் இரும்பை போல் உறுதியாக இருக்கும்.
எந்த வித நோயும் அணுகாது.
மனம் ஒரு நிலைப்படும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.