சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது. இந்த படம் ஜல்லிக்கட்டு கதையம்சம் கொண்டது.

படத்தின் காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவின் அலுவலத்திற்கு இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு காளைகளுடன் சூர்யா பழகுவார் என்றும் அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.