எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கவும், சரியான நேரத்தில் அதிர்ஷ்டம் ஏற்படவும் சில விஷயங்களை செய்வதன் மூலம் கிடைக்கும் என ஜோதிட ஆலோசனை கூறப்படுகிறது.
தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை கடைபிடித்து வந்தால் அதிர்ஷ்டமும் வெற்றியும் பெற முடியும். அத்தகைய சில எளிய வழிமுறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
காயத்ரி மந்திரம்:
இந்து மதத்தில் பல மந்திரங்கள் உள்ளது. அதில் காயத்ரி மந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சக்தி மிகுந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
காலையில் எழுந்த உடன் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம், வெற்றி உங்களைத் தேடி வரும்.
காயத்ரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்: பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.
உள்ளங்கை வழிபாடு:
காலையில் எழுந்ததும் ஒருவர் தன்னுடைய உள்ளங்கையைப் பார்க்க வேண்டும். நமது உள்ளங்கையில் மகாலட்சுமி, மகாவிஷ்ணு, சரஸ்வதி தேவி வாசம் செய்கின்றனர்.
எனவே காலையில் எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கையை சிறிது நேரம் பார்த்து விட்டு எழுந்திருக்கவும். அதோடு இந்த மந்திரத்தையும் உச்சரிக்கவும்.
கராக்ரே வஸ்தே லக்ஷ்மி : கரமத்யே சரஸ்வதி
கர்மூலே தூ கோவிந்தா பிரபாதே கரதர்சனம்
பொருள்:
ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, ஞானம் தரும் சரஸ்வதி, அனைவரையும் காத்தருளக்கூடிய மகாவிஷ்ணுவே இந்த காலை வேளையில் உங்களை இந்த கரம் மூலம் வணங்குகிறேன்.
சூரிய பகவான் வழிபாடு :
தினமும் காலையில் குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்வதும், சூரிய பகவானை வழிபடுவதும் சிறப்பான பலனைத் தரும். தினமும் காலையில் குளித்த பின் செம்பு பாத்திரத்தில் நீரை எடுத்து சூரிய பகவானுக்கு சமர்ப்பியுங்கள்.
இவ்வாறு செய்வதால் கிரக தோஷம் மற்றும் பித்ரா தோஷம் இருந்தால் அது நீங்கிவிடும். மேலும் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
துளசி மாட வழிபாடு:
இந்து மதத்தில் துளசி மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. துளசியை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும். வீட்டில் துளசி மாடம் வைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும்.