பலர் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான வாழைக்காயை பற்றி தான் தற்போது பார்க்கபோகிறோம்.
வாழைக்காயின் மருத்துவ பயன்கள்
அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை விழிப்புணர்வுடன் இருக்க வாழைப்பழம் உதவுகிறது.
கண்களை பாதுகாக்கும்
வாழைக்காயில் வைட்டமின் எ அதிகம் நிறைந்துள்ளது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி போன்றவைகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
ரத்த அழுத்தத்தை போக்கும்
இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க…
வாரத்திற்கு இரு வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால், அதிகமான உடல் எடை குறையும். மேலும் அதிக அளவு பசி உணர்வை கட்டுப்படுத்தும். குறைவான உணவை உட்கொள்ளும் நிலை மாறும்.
மலச்சிக்கலை போக்க…
மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் இக்காயில் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் இருப்பதால் குடல் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.
வாழைக்காய் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
மன அமைதிக்கு…
வாழைக்காயில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் இருக்கிறது.. இந்த அமிலங்கள் மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை சரிசெய்து மன அமைதியை தருகிறது.
எலும்புகளை பாதுகாக்கும்
வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் என எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இக்காயில் இருக்கிறது. தினமும் வாழைக்காயை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, எலும்பு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
புற்றுநோயை தடுக்கும்
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் சிறுகுடல் ஆகியவற்றில் தேங்கும் நச்சு மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய் ஏற்படதவாறு இருக்க தினமும் வாழைக்காய் சாப்பிடவேண்டும்.
வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் ஹார்மோன்களை அதிகரித்து ரத்தத்தில் உள்ள குளுகோஸை அளவை கட்டுப்படுத்துகிறது.