வங்காரவள்ளைக் கீரையுடன் சதகுப்பை (சிறிதளவு), மஞ்சள் (சிறிதளவு) இரண்டையும் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரையுடன் மிளகு, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரையுடன் சிறிது ஓமம் கலந்து அரைத்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்துக் கஷாய மாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரையைத் தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.
வங்காரவள்ளைக் கீரைச் சாற்றில் சுக்குப் பவுடரை குழைத்துச் சாப்பிட்டால் மூச்சுத்திணறல் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரைச் சாற்றில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால், இதய நோய்கள் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரை, கற்பூரவள்ளி – இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
வங்காரவள்ளைக் கீரைச் சாற்றில் வாய்விளங்கத்தை அரைத்துச் சாப்பிட்டால் குடல் கிருமிகள் ஒழியும்.