நான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி

நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா, பவர்ஸ்டார் உடன் திருமணம் செய்வது போன்ற புகைப்படம் வெளிவந்தது. இதனால் வனிதாவிற்கு 4வது திருமணம் நடந்துள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ’பிக்கப் டிராப்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தின் புகைப்படம் தான் இது என்று தெரியவந்தது.

Advertisement

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது நடிகை வனிதா விஜயகுமார் பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வரவிருப்பதாக தன்னுடைய ஜோதிடர் கூறினார் என்றும் ஆனால் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்வது தன்னுடைய தனிப்பட்ட உரிமை. நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

40 என்ன, தினமும் ஒரு திருமணம் நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.