வறட்டு இருமல் சரியாகவே இல்லையா? இதை ட்ரை பண்ணுங்க

மழைக்காலங்களில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக வறட்டு இருமல் ஏற்பட்டால் இரவு நேரங்களில் நம்மை தூங்க விடாமல் தொல்லை கொடுக்கும். இதனை சரி செய்யும் வீட்டு மருத்துவம் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

புதினா

புதினாவில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் தொண்டை வலி மற்றும் தொற்றுக்களைக் குறைக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பாக புதினா டீ குடித்து வந்தால் தொண்டையில் உள்ள தொற்றுகள் அழிந்து வறட்டு இருமலை சரி செய்யும்.

உப்பு நீர் கொப்பளித்தல்

வறட்டு இருமலால் அவதிப்படுகிறவர்களுக்கு தொண்டையில் கடுமையான வலி இருக்கும். இதை சரி செய்ய ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

Also Read : மழை காலத்தில் சளி தொல்லை இருக்கா?…இதை ட்ரை பண்ணுங்க..!!

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்து இருக்கின்றன. ஒரு இன்ச் அளவு இஞ்சியை தோல் சீவி ஒன்றரை கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவேண்டும். பிறகு இதனை வடிகட்டி காலை மற்றும் இரவு என இரண்டு வேளை குடித்து வர வறட்டு இருமல் குறையும்.

Recent Post