வசம்பின் மருத்துவ குணங்கள்

வசம்பு எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது இயற்கையிலேயே அமிலத்தன்மை கொண்டது.

வசம்புடன் பூண்டு, வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் குடலுக்கு தீமை தரும் பூச்சிகள் அழிந்து வெளியேறும்.

வசம்பை தீயில் சுட்டு பொடி செய்து அதனுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிறு வீக்கம், வயிறு உப்புசம் ஆகியவை குணமாகும்.

வசம்பு பவுடரை குழந்தைகளின் படுக்கை அறையில் தூவிவிட்டால் மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, கொசு ஆகியவை அருகில் வர விடாமல் தடுக்கும்.

வசம்பு பொடியை தேங்காய் எண்ணையுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சரும பிரச்சனை. சரும அலர்ஜி ஆகியவை நீங்கும்.

நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாவதற்கும் நெஞ்செரிச்சலை தடுப்பதற்கும் வசம்பு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது வாயு தொந்தரவை நீக்கும்.

நீண்ட தூர பயணத்தின் போது சிலருக்கு குமட்டல் ஏற்படும். அந்த நேரத்தில் வசம்பை நன்றாக பொடி செய்து லேசான சுடுநீரில் கலந்து குடித்தால் பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் நிற்கும்.

வெந்நீரில் கருவேப்பிலை, மஞ்சள் தூள், வசம்பு சேர்த்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.

வசம்பு உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் இதனை அதிக அளவு சாப்பிடக்கூடாது. அதிகம் எடுத்துக்கொண்டால் கடுமையான வாந்தி ஏற்படும்.

Recent Post

RELATED POST