முடக்குவாத நோய்களை தீர்க்கும் வாதநாராயணன் இலை

வாதநாராயணன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னென்ன என்பதை ஒன்று ஒன்றாக கீழே பார்க்கலாம்.

முடக்குவாத நோய்களை தீர்க்க அந்த காலத்தில் கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை தான் பயன்படுத்திவந்தார்கள். வாதநாராயணன் இது மென்மையான கட்டைகளை கொண்ட மரம்.

இம்மரம் 12 மீ. வரை உயரமானவை. இதன் இலைகள் இறகு போல் இருக்கும். வெள்ளை மற்றும் மஞ்சளான பூக்களை கொண்டிருக்கும். மேலும் வாதநாராயணன் மரத்தில் காய்களும், அந்த காய்களில் 10 விதைகளும் இருக்கும்.

Advertisement

வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இதனை குறிப்பிடுவார்கள், சில கிராமங்களில் சாலையோரம் மற்றும் வேலிகளில் வளர்க்கப்படும். இதன், இலை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் மிகுந்தவை.

வீக்கம், கட்டிகள் குணமாக வாதநாராயணன் இலையைச் சமைத்து சாப்பிடுவார்கள், மேலும் வாரத்திற்கு இருமுறை இந்த கீரையுடன், ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, கட்டிகள் மேல் ஒற்றடமிட்டால் கட்டியின் வீக்கம் குறையும்.

வாதநாராயணன் இலைச் சாறு கை, கால் வலி குணமாக நல்ல மருந்து. இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் கை, கால் வலி குணமாகும்.

வாதநாராயணன் இலையை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்தால் குடல் பிரச்சனைகள் தீரும். மேலும் பக்கவாதம், உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு வாதநாராயணன் இலை நல்ல மருந்தாகும்.

தோல் பிரச்சனைக்கு வாதநாராயணன் இலையுடன் குப்பைமேனி இலையும், மஞ்சளும் சேர்த்து அரைத்து தோல் மீது தடவினால் தோல் சம்பந்தமான பிரச்சனை குணமாகும்.

வாரம் ஒருமுறை வாத நாராயணன் கீரையை பருப்பு கலந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும்.

இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.