வயலூர் முருகன் கோயில் வரலாறு

திருச்சியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 13.கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். ‘ருமார வயலூர்’ என்பதையே மக்கள் ரத்தினச் சுருக்கமாக ‘வயலூர்’ என்று கூறுகின்றனர். எனவேதான் ஊர் பெயரை இறைவன் நாமத்தின் முன் இணைத்து ‘வயலூர் முருகன் கோயில்’ என்று கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இந்தக் குமார வயலூர் பலவகைகளிலும் சிறப்பு பெற்றுள்ளது. பசுமை அழகுடன் மிளிரும் இந்த ஊருக்கு ”அக்னீசுவரம்’, ‘வன்னி வயலூர். ‘ஆதிகுமார வயலூர்’, ‘ஆதி வயலூர்’ என்ற பெயர்களும் உண்டு. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தோன்றிய வரலாறு மிகவும் சிறப்புடையது ஆகும்.

சிவலிங்கம்

இந்நாட்டை ஆண்டு வந்த சோழ மன்னன் காட்டில் வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நாவறட்சி மன்னனை வாட்டியது. தாகம் தீர்க்க எண்ணிய அவனுடைய கண்களுக்கு கரும்பு தென்பட்டது.

3 கிளைகளுடன் காணப்பட்ட அந்தக் கரும்பை கையால் ஒடித்தான் மன்னன். சாறு வடியும் என்று எதிர்பார்த்த மன்னன், அக்கரும்பி லிருந்து ரத்தம் கசிவதைக் கண்டு வியந்தான். எனவே, காவலாளி துணையோடு கரும்பைத் தோண்டியெடுத்தான். கரும்புக்கு அடியே சிவலிங்கம் இருப்பதைக் கண்ட அம்மன்னன் மெய்சிலிர்த்துப்போனான்.

இறைவன் அந்த இடத்தில் குடியிருப்பதை உணர்த்தவே, உதிரத்தை கரும்பிலிருந்து வடியச் செய்தான் என்று சுருதிய மன்னன், அந்த இடத்திலேயே கோயில் கட்டி வணங்கி வந்தான்.இதுதான் இக்கோயில் தோன்றிய வரலாறு என்று இன்றளவும் மக்கள் செவி வழி செய்தியாகப் பேசி வருகின்றனர்.

உற்சவர் சன்னதி

இந்தக் கோயிலில், ‘பொய்யா கணபதி சன்னதி அருகில் முத்துக்குமாரசுவாமி உற்சவர் சன்னதி உள்ளது. இதில் சுவாமி மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அன்பர்களுக்கு அருள் பாலிக்கிறார். அருணகிரிநாதருக்கு திருப்புகழ் பாடும் சக்தி தந்தவர் பொய்யா கணபதி என்று கூறப்படுகிறது.

இங்கு அம்மன் சன்னதியின் அருகே முத்துக் குமாரசுவாமி புடைப்பு சிற்பமாகக் காட்சி தருகிறார். முத்துக்குமாரசுவாமிதான் சோமரசம் பேட்டைக்கும், அதவத்தூருக்கும் எழுந்தருள் கிறார்.

மயில்

இக்கோயிலில் முருகன் வள்ளி-தெய்வானை யுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகின்றார். இந்த மயில் வடக்குப் பக்கம் நோக்கி இருப்பது அதிசயமானதாகும். மேலும் மகாலட்சுமியும், சண்டிகேசுவரரும் அதேபோல் கல்லால மரத் தடியில் தென்முகக் கடவுளும் தேரடியான் கோயிலும் உள்ளது. உள்ளார்.

சிறப்பம்சங்கள்

பொதுவாக வடக்கு நோக்கி இருக்கும். ஆதிநாயகி சன்னதி வயலூரில் தெற்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. மேலும் தாய்-தந்தையை தனித்து நின்று பூஜை செய்யும் முருகன் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளி யுடன் சேர்ந்து பூஜை செய்வதும் வித்தியாசமான காட்சியாக உள்ளது.

இக்கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது விசேஷம். இது தவிர இங்குள்ள முருகனைப் பிரார்த்திப்பவர்கள் பிற முருகன் கோயிலில் அந்த பிரார்த்தனையை செலுத்தினால் அந்த பக்தர் களுக்கு ஆண்டவன் சோதனைகளைக் கொடுத்து தனது பிரார்த்தனைப் பொருட்களைப் பெற்று விடுவார் என்று கூறுகின்றனர்.

Recent Post