திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் வரலாறு

ஊர் -திருவள்ளூர்

மாவட்டம் -திருவள்ளூர்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -எவ்வுள் கிடந்தான் (வீரராகவப்பெருமாள்)

தாயார் -கனகவல்லி

தீர்த்தம்– ஹிருதாபதணி

திருவிழா – தை மாதம் 10 நாள் நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரையில் 10 நாள் நாட்கள் பிரம்மோற்சவம், ஏழு நாட்கள் பவித்ர உற்சவம், அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என விசேஷ தினங்களில் தவிர வாரத்தின் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

திறக்கும் நேரம் – காலை 6:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அமாவாசை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 60வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது சுமார் பதினைந்து அடி நீளமுள்ள ஐந்தடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார்.

தொண்டை மண்டலத்தில் மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள் கூட விலகும் என சொல்லப்படுகிறது.

சாலிஹோத்ரர் என்னும் முனிவர், இக்கோயில் புனித தீர்த்த கரையில் ஒரு வருடம் தவம் புரிந்து தை மாதத்தில் தனது பூஜைகளை முடித்து விட்டு. சுவாமிக்கு நிவேதனமாக மாவை செய்து ஒரு பங்கை தனக்கும் மற்றொரு பங்கை வேறு எவருக்கேனும் தானம் செய்ய இருந்தார். அவ்வழியே பசியுடன் வந்த வயதான அந்தணருக்கு ஒரு பங்கை கொடுத்தார்.

அந்தணருக்கு பசி தீரவில்லை எனவே தனக்கு என இருந்த ஒரு பங்கையும் கொடுத்து மகிழ்ந்தார். முனிவர் அன்று முதல் மீண்டும் உபவாசம் ஏற்று ஒரு வருடம் தவம் செய்து, பின் நிவேதனமாக மாவை மீண்டும் படைத்து காத்திருந்த வேளையில், அதே கிழ அந்தணர் வந்து மாவு கேட்க முனிவரும் தந்தார்.

பிறகு படுத்துறங்க கிழவர் “எவ்வுள்” என்று வினவ முனிவர் தன் இடத்தையே காட்டி “இவ்விடம் படுத்து கொள்ளுமாறு சொன்னார். உடன் பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி கொடுத்து “வரம் கேள்” என்றார். முனிவரும் கஷ்டம் என வரும் பக்தர்களுக்கு நன்மை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

மூன்று அமாவாசை தொடர்ந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் தீரும் என்றும் வயிறு வலி கைகால் வியாதி காய்ச்சல் ஆகியவை குணமாகி விடும் என்றும் சொல்லப்படுகிறது.

Recent Post