கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

பொறாமை மற்றும் தீய நோக்கத்துடன் ஒருவரை பார்க்கும்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நம்பபடுகிறது. இதனை கண் திருஷ்டி என்று கூறுவார்கள். இதிலிருந்து தப்பித்து கொள்ள தாயத்துகள், கயிறுகள் போன்றவற்றை வாங்கி கட்டிக் கொள்கிறார்கள்.

கண் திருஷ்டி அறிகுறிகள்

அடிக்கடி உடல்நிலை முடியாமல் போவது, கீழே விழுந்து அடிபடுவது, கணவன்-மனைவிக்குள் சண்டை இதுபோன்று எந்த நேரமும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றார் கண் திருஷ்டி பட்டிருக்கிறது என அர்த்தம். இதனை விரட்டுவது எப்படி என்பதை பார்ப்போம்.

மஞ்சள் பொட்டு

மஞ்சள் பொட்டு தீய கண் பார்வைகளை திசை திருப்பவும், நேர்மறை சக்தியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. எனவே நெற்றியில் மஞ்சள் நிற பொட்டு வைப்பது கண் பார்வையில் இருந்து பாதுகாப்பை தரும் என நம்பப்படுகிறது.

கற்பூரம்

வீட்டில் கற்பூரத்தை எரிப்பதால் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் அமைதி, செழிப்பு ஆகியவை மேலோங்கும்.

ருத்ராட்சை

மோசமான கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க ருத்ராட்சையை அணிந்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது தெய்வீக சக்தியுடன் ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிறது.

மீன்தொட்டி

இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.

திருஷ்டி கழிக்க உகந்த நாள்

திருஷ்டிக் கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும்.

Recent Post