இப்படி செஞ்சு பாருங்க…ஒரு கொசு கூட வீட்டுக்குள்ள வராது

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாகிவிடும். இதன் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும். இந்த பிரச்சனையை சமாளிக்க ரசாயன மருந்துகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கொசுக்களை விரட்ட உங்கள் வீட்டில் உள்ள பொருட்களையே பயன்படுத்தலாம் , அது என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.

துளசி இலைகள்

துளசி இலைகள் கொசுக்களை எளிதில் விரட்டும். துளசி இலையின் சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை வீடு முழுவதும் தெளிக்கவேண்டும். துளசியின் வாசனையால் கொசுக்கள் ஓடிவிடும். இந்த சாறை தயாரித்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தினமும் மாலை நேரத்தில் தெளித்து வந்தால் கொசுக்கள் தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை விரட்ட முடியும். வேப்ப எண்ணையை தண்ணீரில் கலந்து கை, கால்களில் தடவலாம். இவ்வாறு செய்வதால் கொசுக்கள் நமது அருகே வராது.

கற்பூரம்

கற்பூரத்தைப் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம். இதற்கு வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும். அரை மணி நேரம் கழித்து, கதவு மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும். கற்பூர வாசனை கொசுக்களை ஈர்க்காது. இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது.

Recent Post

RELATED POST