வீட்டில் தரித்திரம் விலகி லட்சுமி கடாட்சம் உருவாக செய்ய வேண்டியவை

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று சத்திய நாராயண பூஜை செய்து வந்தால் செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமி வழிபட வேண்டும்.

நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என சாஸ்திரம் சொல்கிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது மகாலட்சுமி முகத்தில் விழிப்பதற்கு சமம்.

அதேபோல காலையில் எழுந்ததும் பசுவை பார்ப்பது மகாலட்சுமியை தரிசித்த பலன் கிடைக்கும்.

வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விலங்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

அதிகாலை 5 மணி என்பது பிரம்ம முகூர்த்தம். இந்த வேளையில் எழுந்திருப்பது வீட்டின் தரித்திரத்தைப் போக்கும். சுபிட்சத்தைக் கொடுக்கும்.

Recent Post