வயிற்றுப் புழு
வேளைக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் மூன்று மிளகு, சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் ஒழியும்.
பசி எடுக்க
வேளைக்கீரையுடன் சிறிதளவு மஞ்சள், சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
வாத நோய்
வேளைக்கீரை, வாதநாராயணன் கீரை, மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து இதனை ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குணமாகும்.
கல்லீரல் வீக்கம்
வேளைக்கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனை தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
நெஞ்சு வலி
வேளைக்கீரை, தாமரை பூ இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் நெஞ்சுவலி உடனே சரியாகும்.
காது வலி
காது வலியால் அவதிப்படுபவர்கள் வேளைக்கீரையின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விட காது வலி குணமாகும்.
வாயுக்கோளறு
10 கிராம் வேளைக்கீரையுடன் 5 கிராம் ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வாயுக்கோளாறு குணமாகும்.