அருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி 7) திருக்கோயில்

ஊர் -பெருங்குளம்

மாவட்டம் -தூத்துக்குடி

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -வேங்கட வாணன் ,ஸ்ரீநிவாசன்

தாயார் -அலமேலு மங்கைத் தாயார் ,கமலாவதி, குழந்தை வல்லித் தாயார்.

தீர்த்தம் -பெருங்குளத்தீர்த்தம்

திருவிழா -வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம் -காலை 7:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 86 வது திவ்ய தேசம்.

தல வரலாறு :

கமலாவதி என்ற பெண் வேதாசரன் என்ற அந்தணருக்கு பிறந்தாள். இவள் பகவானை குறித்து தவம் செய்ய பகவான் காட்சிக்கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் அச்மசாரன் என்ற அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன்மேல் நாட்டியமாடி தாகவும் சொல்லப்படுகிறது .தேவர்கள் பிரார்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்சவராக அருகில் எழுந்தருளியுள்ளார் .

நவ திருப்பதிகளில் இது ஏழாவது திருப்பதி .நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். சனி கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலக இத்தலத்தில் வழிபாடு செய்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வேங்கடவாணப் பெருமாள் ஆனந்த நிலைய விமானத்தில் கீழ் கிழக்கே திருமுக மண்டல நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்கே பெருமாளே நவக்கிரகங்களாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இங்கு சனி கிரகத்திற்கு என்று தனியே சன்னதி கிடையாது. பெருமாளே இங்கு சனிகிரகமாக உள்ளார். அவரவர்க்கு உள்ள தோஷம் விலக பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Recent Post