வில்வ மரம் மிகப் புனிதமானது. சிவபெருமானுக்கு உரியது வில்வ இலை. தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது.
வில்வத்தின் வேறு பெயர்கள்
கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை என பல பெயர்கள் உண்டு.
வில்வ மரத்தின் இலை, காய், பழம், வேர், பூ என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. தசை வளர்ச்சிக்கு தேவையான பெக்டின், இரும்புச்சத்து, அமிலச்சத்து ஆகியவை வில்வத்தில் உள்ளது.
இம்மரம் அரிதாக காணப்படும். சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இதனுடைய இலைகள் காரத்தன்மை கொண்டவை. வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியை போக்கும். எல்லா விதமான மேக நோய்களையும் நிவர்த்தி செய்யும் தன்மை கொண்டது. அனைத்து வகையான காய்ச்சல்களையும் நீக்கும்.
வில்வ இலையை கசக்கி அந்த சாறை எடுத்து நம் காதுகளில் சிறு துளி விட காது வலி விரைவில் நீங்கும்.
வில்வப்பழம் பித்த குறைபாடுகளை அகற்றும். வில்வ வேர் பித்த கப நோய்கள், வயிற்றுவலி, காய்ச்சல், உடல்வலி, பசியின்மை, விக்கல் ஆகிய நோய்களை நிவர்த்தி செய்யும்.
வில்வப் பழச்சாறுடன் சிறிது மிளகு பொடி சேர்த்து, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், வீரிய விருத்தி உண்டாகும். மேலும் மூலநோய், தொண்டைப்புண் சரி செய்யும்.
இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். வில்வப் பூக்களோடு புளி சேர்த்து, ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், குடல் வலிமை பெறும். வில்வ இலை பொடியை சாப்பிட்டு வந்தால் குடல்புண், வாந்தி, மயக்கம் தீரும்.
வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.