வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். ஒரு நாளைக்கு 100மிகி வைட்டமின் சி யை எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர் உருவாகும் அபாயம் குறைவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
பொதுவாக ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. இருப்பினும், ஆரஞ்சு பழத்தை தவிர வேறு சில பழங்களிலும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அந்த பழங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கொய்யாப்பழம்
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
166 கிராம் அளவிலான ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது 97 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் காணப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
Also Read : வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள்
கிவி பழம்
56 மில்லிகிராம் அளவிலான கிவி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன், வெள்ளையணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கிறது. கிவி பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் நன்மைகள் மிகவும் பெரியது. கிவியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை அதன் சுவைக்காகவும் அற்புதமான மருத்துவ குணங்களுக்காகவும் தனித்து விளங்குகிறது. நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் எலுமிச்சை முக்கிய பங்காற்றுகிறது.
பப்பாளி
ஒரு கப் அளவிலான பப்பாளியில் 88 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் ஏ சத்து முடி வளர்ச்சியைத் தூண்டி கூந்தலை மென்மையாக பராமரிக்க உதவுகிறது. பப்பாளி சாப்பிடுவது உங்களின் செரிமான சக்தியை மேம்படுத்தும்.