வைட்டமின் மாத்திரைகளைப் பற்றி பொதுமக்களிடம் தவறான கருத்து நிலவி வருகிறது. நோய் வருவதற்கும் உடல் சோர்வு அடைவதற்கும் வைட்டமின் குறைவே காரணம் என்று பலரும் தவறாக நினைத்து விடுகிறார்கள். அதிகமாக வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தைகள் பலமாகவும் புத்திசாலியாகவும் வளருவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
சிலர் அவர்கள் இஷ்டத்துக்கு வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சிலரோ டாக்டரிடம் மருந்து வாங்கச் செல்லும்போது அவர் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளோடு சேர்த்து வைட்டமின் மாத்திரைகளையும் எழுதித் தரும்படி வற்புறுத்துகிறார்கள்.
வைட்டமின்கள் உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் சத்துகள்தான். ஆனால் மிகக்குறைந்த அளவிலே அது தேவைப்படுகிறது. உடலுக்குள் செல்லும் உணவை ஜீரணம் செய்ய வைக்கும் செயல்பாடுகளாலும், குடலுக்குள் உணவால் தோன்றும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின் அளவு குறைகிறது. இதனால் சிலவகை நோய்கள் உருவாகின்றன.அப்போது அதை சரிசெய்ய வைட்டமின் மாத்திரைகளோ ஊசி மருந்துகளோ தேவைப்படுகின்றன. மற்ற நேரங்களில் நமக்குத் தேவையான வைட்டமின்கள் நாம் உண்ணும் உணவில் இருந்தே கிடைத்து விடுகின்றன.
வைட்டமின் ‘ஏ, பி -6, டி’ போன்றவைகளை அதிகம் உண்டாலும் நோய் வரும் அதனால் டாக்டரின் ஆலோசனைப்படி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.