சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?

சாப்பிட்ட முடித்ததும், நடைபயிற்சியை செய்தால் உடல் எடையை நன்கு குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் சாப்பிட்டு முடித்ததும், யாருக்கு நடக்க பிடிக்கும். கட்டில், மெத்தை போன்றவற்றில் படுத்து குட்டி தூக்கம் போட தானே பிடிக்கும். ஆனால், அந்த தூக்கத்தையும் மீறி எழுந்து நடைபயிற்சியை மேற்கொண்டால், உடல் எடையை குறைக்க முடியுமாம்.

சாப்பிட்ட உடன் நடப்பதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுமாம். கொழுப்பு சேராது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. இரத்த ஓட்டம் சீராகும். அதேசமயம் உடலில் மெட்டாபாலிசமும் அதிகரிக்கும் என்கின்றனர்.

இந்த நடைப்பயிற்சி என்பது வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு செய்யச் சொன்னால் முடியாது. கட்டுப்பாடான உணவு சாப்பிட்டு, புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த சம ஊட்டச்சத்தான உணவை சாப்பிட்டால்தால் நடக்க முடியும் என்கிறார்கள். இதனால் ஆரோக்கியமான உடல் எடையை தற்காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.

Recent Post

RELATED POST