உடல் சூட்டை குறைக்கும் தர்பூசணி சப்ஜா ஜூஸ்..!

சப்ஜா விதைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இதிலுள்ள நார்ச் சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் எடை இழப்புக்கு உதவுகிறது.

தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

தர்பூசணி சப்ஜா ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சப்ஜா விதை – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
தேன் – சிறிதளவு

செய்முறை :

முதலில் வெந்நீரில் சப்ஜா விதையை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

தர்பூசணி சாறுடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும். சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு குடிக்கலாம்.

Recent Post