கஷ்டப்படாமல் எடை குறையனுமா.. கிச்சனிலே உள்ளது தீர்வு.. இத குடிங்க..

இன்றைய கலாச்சார மாற்றத்தின்படி பார்க்கும்போது, நம் உடலில் பெரும்பாலான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதில், பலரும் அவதிப்படுவது உடல் பருமனால் தான்.

பல்வேறு சிகிச்சைகள், டயட், உடற்பயிற்சிகள் செய்தும் மாற்றம் பெறாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கும் இயற்கையிலேயே மருந்து உள்ளது என்றால் ஆச்சரியம் அடைவீர்கள்.

அதுவும் உங்கள் வீட்டு கிச்சனிலேயே அதற்கான தீர்வு இருக்கிறது என்றால் கூடுதல் ஆனந்தம் தானே. ஆம், நம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் சீரகம் தான் அதற்கான தீர்வு.

சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நண்மைகள் பற்றி தற்போது பார்ப்போம்..

அதற்கு முன் சீரக தண்ணீரை முறையாக செய்வது பற்றி பார்ப்போம். தண்ணீரை அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்துவிட்டு, அதில் 3 தேக்கரண்டி அளவிற்கு சீரகத்தை போடவும்.

நன்றாக கொதித்து முடித்ததும், குடிக்கும் பதத்தில் ஆற வைக்கவும். பின்னர் தண்ணீரை தினமும் குடித்து வந்தால், மாற்றம் தெரியும். ஆனால், இந்த மாற்றம் விரைவாக தெரியாது.

பல நாட்கள் கழித்து தான் தெரியும். ஆனால் நிரந்தரமானதாக இருக்கும். இதுமட்டுமின்றி கீழ்கண்ட சில பிரச்சனைகளுக்கும் சீரக தண்ணீர் உகந்தது. அதனையும் பார்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக பசி :-

சிலருக்கு அளவுக்கு அதிகமான பசி ஏற்படும்போது, கண்ட கண்ட பொருட்களையொல்லம் சாப்பிட்டுவிடுவார்கள். இதனாலும் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பசியை குறைப்பதற்கு மாத்திரைகளையும் சாப்பிடுவார்கள். அதற்கு பதில் சீரக தண்ணீர் குடித்தால், இயற்கை முறையில் பசி கட்டுப்படுத்தப்படும்.

சிறுநீரக பிரச்சனை தடுத்தல் :-

சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சுகளை முழுவதுமாக வெளியேற்றுவதால், சிறுநீரக பிரச்சனைகள், நம்மை அண்டாது.

மூளை சுறுசுறுப்பு :-

தினமும் காபி அல்லது டீ குடிப்பதற்கு பதிலாக சீரக தண்ணீர் குடித்துவந்தால், மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.

Recent Post

RELATED POST