AI சாட்போட்களிடம் நீங்கள் தெரியாமல் கூட இதை செய்யக்கூடாது..!!

இன்றைய காலகட்டத்தில் ChatGPT மற்றும் பிற AI சாட்போட்களை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் குறிப்பாக சுகாதார ஆலோசனை போன்ற முக்கியமான தகவல்களுக்கு அவற்றை முழுவதுமாக நம்ப வேண்டாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அது என்னென்ன என்பதை இதில் விரிவாக பார்ப்போம்.

தனிப்பட்ட தகவல்

உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை AI Chatbots உடன் ஒருபோதும் பகிர வேண்டாம். ஏனென்றால் உங்களை அடையாளம் காணவும் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம். AI Chatbots க்கு நீங்கள் கூறும் அனைத்தையும் சேமிக்கலாம். மேலும் மற்றவர்களுடன் பகிரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வங்கி தொடர்பான தகவல்

உங்கள் வங்கிக் கணக்கு எண்கள், கிரெடிட் கார்டு எண்களை AI சாட்போட்களுடன் உங்கள் நிதித் தகவலைப் பகிர வேண்டாம். உங்கள் பணத்தை அல்லது உங்கள் அடையாளத்தைத் திருட இந்தத் தகவல் பயன்படுத்தப்படலாம்.

சுகாதார ஆலோசனை

AIயிடம் சுகாதார ஆலோசனையைக் கேட்க வேண்டாம். உங்கள் உடல்நல விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம். AI உங்கள் மருத்துவர் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Recent Post