முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..மீறினால் ஆபத்துதான்

முக்கியமான காய்கறிகளில் ஒன்றாக முள்ளங்கி கருதப்படுகிறது. முள்ளங்கியில் நீர்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் குடல் ஆரோக்கியம் மற்றும் எடை கட்டுப்பாட்டிற்கு பயன்படுகிறது.

முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்ஃபர் அடங்கியுள்ளன, இவை உடலை நச்சுத்தன்மையை வெளியேற்றி கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

வெள்ளரி மற்றும் முள்ளங்கி

வெள்ளரியில் வைட்டமின் சி-யை உறிஞ்சும் அஸ்கார்பேட் உள்ளது. இந்த காரணத்திற்காக, வெள்ளரி மற்றும் முள்ளங்கியை ஒன்றாக சாப்பிடக்கூடாது.

முள்ளங்கி மற்றும் ஆரஞ்சு

முள்ளங்கியுடன் ஆரஞ்சுப் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாக மாறலாம். இதனால் சில வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

முள்ளங்கி மற்றும் பாகற்காய்

முள்ளங்கி மற்றும் பாகற்காயை ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாது. இந்த இரண்டிலும் காணப்படும் இயற்கை கூறுகள் தங்களுக்குள் செயல்படுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

முள்ளங்கி மற்றும் பால்

முள்ளங்கி சாப்பிட்டல் உடலின் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும். ஆனால் பால் குளிர்ச்சியானது. எனவே முள்ளங்கி சாப்பிட்ட பின் பால் குடிப்பது நெஞ்செரிச்சல், வயிற்று வலியைத் தூண்டும்.

Recent Post