உலகம் முழுவதும் பல்வேறு உணவுகளில் வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பெருமளவு உதவுகின்றன.
வெங்காயத்தில் வைட்டமின் சி, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை இருப்பதால், இவை அனைத்தும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
வெங்காயம் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், வெங்காயத்தை ஒரு மாதத்திற்கு உணவில் இருந்து விலக்கி வைத்தால், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், அதை தவிர்க்கும்போது மலச்சிக்கல் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அத்துடன் செரிமான பிரச்சனையும் ஏற்படும். வெங்காயத்தை தவிர்த்தால், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் கிடைக்காமல் போகும். இதனால் உடல் சோர்வு, ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.