ஆண்கள் நீண்ட நாட்களுக்கு விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்ன ஆகும்..?

ஆண்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் விந்தணுக்களை வெளியேற்றுவது அவசியம். விந்தணுக்களை வெளியேற்றாமல் அப்படியே தேக்கி வைப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நீங்கள் விந்தணுக்களை முறையாக வெளியேற்றாமல் இருந்தால் உங்கள் சிந்தனைகள் பாலியல் குறித்தே இருக்கும். இதனால் வேலைகளில் கவனம் இருக்காது. எனவே விந்தணுக்களை அவ்வபோது வெளியேற்றி சீராக கவனிப்பது அவசியம்.

உடலுறவில் ஈடுபடாதபோது அவர்கள் ஆணுறுப்பு விறைப்பின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. உடலுறவு வைத்துக்கொள்ள முடியாத சூழலில் சுய இன்பம் செய்தாவது விந்தணுக்களை வெளியேற்ற வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

விந்தணுக்களை வெளியேற்றாமல் தேக்கி வைத்திருந்தால் புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. வாரத்தில் இரண்டு முறையாவது வெளியேற்றினால் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து குறைவு என்கிறது.

டிக்கடி உடலுறவில் ஈடுபடுவோர் விந்தணுக்களை வெளியேற்றுவதால் மனதளவிலும் , உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாக பயோலாஜிக்கல் சைக்காலஜி ஆய்வு கூறுகிறது. இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.

ஆண்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையேனும் உடலுறவு கொள்வதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். விந்தணுக்களை வெளியேற்றாமல் வைத்திருந்தால் எதிர்மறையான பக்கவிளைவுகளே உண்டாகும்.

Recent Post