மூலநோய் போலத் தெரியும் வேறு ஒரு நோயைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். பிஸ்ஸர் என்று ஆங்கிலத்தில் சொல்கிற ஒரு நோயை மக்கள் மூலநோயின் ஒரு வகை என நினைக்கிறார்கள்.
இது தவறு. இதைப் பற்றி விரிவாகத்தெரிந்துக்கொள்ளுங்கள்.
கொட்டாவி விடாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? கொட்டாவியை விடும்போது வாயை அகலமாகத் திறந்தால் வாயின் இரு பக்ககங்களின் நுனிகளிலும் லேசான கிழிச்சல் உண்டாவது உண்டு.
இன்னும் சுலபமாகச் சொல்லவேண்டும் என்றால், பனிப் பொழிவின்போது உதடு வெடிக்கிறதல்லவா? இதே மாதிரி ஆசனவாயின் மேற்பக்கத்திலோ, கீழ்பக்கத்திலோ உண்டாகும் வெடிப்பு அல்லது கீறல்தான் பிஸ்ஸர்.
ஆண்களுக்கு ஆசனவாயின் கீழ்ப்பக்கத்திலும், கீழ் மற்றும் மேல் பக்கங்களில் சம அளவில் பெண்களுக்கும் பிஸ்ஸர் வருகிறது. மலக்குடல் அசன வாயுடன் சேரும் இடத்தில் ஒரு வளைவு இருக்கிறது.
இந்த இடத்தில் வரும் மலம் வெளியே கழியாமல் தங்கி கெட்டியாகிவிடும். இதை முக்கி வெளியேற்ற முற்படும் போது உலரந்த பகுதிகள் மென்மையான ஆசன வாய் தசைப் பகுதியை கிழித்துவிடுவதால் இந்த பாதிப்பு வருகிறது.
குடலில் நீர்ச்சத்து முற்றிலும் உறிஞ்சப்பட்டு மலம் வெளியேறும்போது ஏற்படு்ம் அழுத்தத்தாலும் ஆசனவாய்ப் பகுதியில் கீறல்கள் வருகின்றன.
மலச்சிக்கலை தவிர்க்க எனிமா கொடுக்கும் போது தோன்றும் அசவுகரியங்களுக்கும் மென்மையான ஆசனவாய்த் தசையைக் கிழித்துவிடுகின்றன. குழந்தைகளின் ஆசன வாய்த் தசைகள் இறுக்கமாக இருப்பதால் அவர்களுக்கும் இப்பரச்சனை அதிக அளவில் வருகின்றன.