மெத்தனால் என்றால் என்ன? அது எப்படி விஷமாக மாறுகிறது?

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சாராயத்தில் ஏன் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது? அது எப்படி விஷமாக மாறி உயிரைப் பறிக்கிறது? என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

மெத்தனால் என்றால் என்ன?

மெத்தனால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு அமிலம் ஆகும். வார்னிஷ், தின்னர் போன்ற பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது. அடிப்படையில் மெத்தனால் உயிரைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொருள். விரைவாக மது தயாரிக்கவும், போதையை அதிகரிக்கவும் கள்ளச்சாராய வியாபாரிகள் இதை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மெத்தனால் எப்போது விஷமாக மாறும்?

மனித உடலில் குறைந்தபட்சம் 30 மில்லி மெத்தனால் சென்றாலே அது உயிரைப் பாதிக்கும் விஷமாக மாறும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை உட்கொள்ளும் அளவைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். நாம் என்ன சாப்பிட்டாலும், அதைச் செரிமானம் செய்வது, நமது வயிற்றில் இருக்கும் என்சைமின் எனப்படும் ஒரு வேதியியல் வினைதான்.

மெத்தனால் கலந்த சாராயத்தை ஒருவர் குடித்த உடன், ஆல்கஹால் டிஹைட்ரோஜெனேஸ் (Alcohol dehydrogenase) எனும் வயிற்றில் உள்ள என்சைம் இதற்கு வினையாற்றும். இதன் காரணமாக மெத்தனால், பார்மிக் அமிலம் மற்றும் ஃபார்மால்டிஹைடாக பிரியும். ஃபார்மால்டிஹைட் மற்றும் பார்மிக் அமிலம்தான் அனைத்து பக்க விளைவுகளுக்கும் காரணம்.

உயிரை பறிக்கும் மெத்தனால்

மெத்தனால் கலக்கப்பட்ட சாராயத்தை உட்கொள்வதுடன் உணவு, நரம்பு மண்டலங்களை சீர்குலைக்கும். வயிறும், குடலும் வெந்துவிடும். நரம்பு மண்டலம் வழியாக மூளைக்கு விஷத்தன்மை பரவி மூளை செல்களை அழித்து கண்பார்வையையும், செவித்திறனையும் பறித்துவிடும். மேலும், நுரை நுரையாக வாந்தி வரும், இந்த வாந்தி நுரையீரலை சென்றடைந்து மூச்சு விடமுடியாமல் தடுத்து உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Recent Post

RELATED POST